மேற்குவங்க சட்டசபையை அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் பிப்ரவரி 2ம் தேதி முடக்கி உத்தரவு பிறப்பித்தார். மேற்கு வங்க சட்டசபையை அம்மாநில ஆளுநர் முடக்கியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்தார். அதில், கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். மேலும், சட்டசபை முடக்கப்பட்டதன் முழுமையான காரணத்தையும் புரிந்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டிருந்தார் ஸ்டாலின். இதனையடுத்து மேற்கு வங்க மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே சட்டசபையை ஒத்தி வைக்கப்பட்டதாகவும் அதன் பின்னால் உள்ள உண்மையை அறியாமல் ஸ்டாலின் பேசுவதாகவும் கூறி, ஸ்டாலினுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதனால் அவமானப்பட்ட ஸ்டாலின் தனது முந்தையப் பதிவை அழித்துவிட்டார்.