அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி ஒரு அறிக்கையில், ‘பாரத சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி சமூகம் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கியது. நூற்றுக்கணக்கான பழங்குடியினப் புரட்சியாளர்கள் உயிர் தியாகம் செய்து சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்துள்ளனர். தேசம், கலாச்சாரம், மதம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் பழங்குடியினர் சமூகம் எப்போதும் முன்னணியில் உள்ளது. இதை மனதில் வைத்து, பழங்குடியின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சுதந்திர போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை, ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ (பழங்குடியின கௌரவ தினம்) என கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இது ஒட்டு மொத்த பழங்குடியினரையும், ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்துகிறது. இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாவலராக இருக்கும் பழங்குடி சமூகத்திற்கு இது கௌரவமளிக்கும், பாரத்த்தின் புகழ்பெற்ற வரலாற்றை மீட்டெடுக்கும்’ என தெரிவித்தார்.