கோடிக் கணக்கான ஹிந்துக்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமான ஸ்ரீராமபிரானுக்கு பிரம்மாண்ட ஆலயம் அயோத்தியில் அமையவிருப்பதையொட்டி அயோத்தியே புதுப்பொலிவு பெற்று வருகிறது. இந்நிலையில், நவம்பர் 2, 1990ல் நடைபெற்ற கர சேவையில் கலந்து கொள்ள, உத்தர பிரதேசம் சென்ற, ராம் கோத்தாரி (23) , ஷரத் கோத்தாரி (20) ஆகிய இரு சகோதரர்களை, அன்றைய முதல்வர் முலாயம் சிங் அரசின் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், அயோத்தி சாலையை கோத்தாரி சகோதரர்கள் சாலை என பெயர் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.