இந்தியா அறக்கட்டளை சார்பில் தலித் வரலாறு தொடர்பான புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பாரதத்தின் வரலாறும், பட்டியலின சமூகத்தினர் வரலாறும் வேறு வேறல்ல. அவர்களின் வரலாறு இல்லாமல் பாரதத்தின் வரலாறு முழுமையடையாது. நம் சமூகத்தில் சமத்துவம் இல்லை என குறிப்பிட்ட பிரிவினர் நினைக்கும்வரை, இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இட ஒதுக்கீடுதான் மிகவும் உறுதியான நடவடிக்கை. இட ஒதுக்கீடு, அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைப்பது என இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சிலரை பட்டியலினத் தலைவர்களாக மட்டுமே கூறுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் சமூக மாற்றத்துக்காக போராடியவர்கள். அவர்கள் அனைத்து சமூகத்துக்கும் சொந்தமானவர்கள். இடஒதுக்கீடு தொடர ஆர்.எஸ்.எஸ் எப்போதும் முழு ஆதரவு தருகிறது’ என்று கூறினார்.