சாலை பெயர்களை மாற்ற கோரிக்கை

டெல்லி பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா, டெல்லியில் உள்ள 6 சாலைகளுக்கு மறுபெயரிட வேண்டும் என்று டெல்லி மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சாலைகளின் பழைய பெயர்கள் அடிமைத்தனத்த’ குறிக்கிறது, அந்த சாலைகளுக்கு வைக்கப்படும் தேசத் தலைவர்களின் பெயர்கள் புதிய பெயர்கள் இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் உத்வேகம் அளிக்கும் என்று கூறினார். முகலாயர் கால அடிமைத்தனத்தின் சின்னமான துக்ளக் சாலைக்கு குரு கோவிந்த் சிங் பெயர் சூட்டப்பட வேண்டும். ஹிந்துக்களின் பெருமைமிகு மகாராணா பிரதாப்பின் 482வது பிறந்தநாளில் அக்பர் சாலையின் பெயரை மாற்றி மகாராணா பிரதாப் சாலையாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ள அவர், இதேபோல, ஔரங்கசீப் லேன், ஹுமாயூன் சாலை, ஷாஜகான் சாலை, பாபர் லேன் ஆகியவற்றின் பெயர்களை முறையே அப்துல் கலாம் லேன், பிபின் ராவத் சாலை, குதிராம் போஸ் லேன் என மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். முன்னதாக, ஹுமாயூன்பூர், யூசுப் சராய், பேகம்பூர், ஹவுஸ் காஸ் உள்ளிட்ட 40 கிராமங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள், டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்ளை சூட்ட வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.