டிக்டாக்கிற்கு தடை விதிக்க கோரிக்கை

சீனாவின் டிக்-டாக், வீ சாட் செயலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவற்றிற்கு தடை விதித்தார் முன்னாள் அதிபர் டிரம்ப். இதனை எதிர்த்து டிக்டாக் சார்பில் தொடரப்பட்ட வழக்கினால் டிரம்பின் தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சீன அரசு வாங்கியிருப்பதால் உடனடியாக டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டுமென குடியரசு கட்சியை சேர்ந்த செனட் சபை உறுப்பினர் மார்கோ ரூபியோ ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், ‘டிக்டாக்கில் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு தொடர்பில்லை என்று பைடன் இனி பாசாங்கு செய்ய முடியாது. அது அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அந்த செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என கோரியுள்ளார்.