குடியரசு தினக் கொண்டாட்டம்

ஒவ்வொரு ஆண்டும்,  ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், இது தொடர்பான கொண்டாட்டங்களை மத்திய அரசு ஜனவரி 24ம் தேதியே தொடங்கி விடும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு முதல் இதில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது, குடியரசு தின விழாவுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23’ஐயும் சேர்த்து கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. நேதாஜியின் பிறந்த நாள் இனி ஒவ்வொரு வருடமும் ‘பராக்கிரம திவஸ்’ ஆக கொண்டாடப்படும் என மத்திய அரசு கடந்த வருடம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.