தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘கடந்த செப்டம்பர் 27ல் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஊடகங்களை விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதற்கு சில பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. அது, எங்களுக்கு ஏற்புடையது அல்ல. ஹெச்.ராஜா, தேசத்திற்கு எதிராக செயல்படக்கூடிய ஊடகங்களை மட்டுமே அவ்வாறு பேசி இருந்தாரே தவிர தேசிய சிந்தனையுள்ள, நாட்டுப்பற்றுள்ள ஊடகங்களை அவர் விமர்சிக்கவில்லை. ஆகவே அவருடைய அந்த விமர்சனங்களை தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் வரவேற்கிறது. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஊடகங்களை ‘ரெட்லைட் மீடியா’ என்று தகாத வார்த்தைகளால் பேசும்போது இந்த பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? தேச விரோதமாக செயல்படுகின்ற ஊடகங்களுக்குத்தான் இதுபோன்ற இரண்டு நிலைப்பாடுகள் இருக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.