ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்

கோவையில் சோதனை முயற்சியாக போக்குவரத்து காவல்துறையினர் ரிமோட் மூலம் சிக்னலை இயக்கம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவை, கணபதி டெக்ஸ்டைல்ஸ் பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலை நவீன ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒழுங்குபடுத்தும் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இதில் சிக்னல்களில் காவலர் பணியில் இல்லாத போது தனியாக முறையில் டைமர் வைத்து இயக்கப்படுகின்றன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முறையில், காவலர் கையில் ரிமோட்டை வைத்துக்கொண்டே சிக்னலை இயக்க முடியும், இதற்காக அவர் கூண்டில் அமர வேண்டிய கட்டாயம் இல்லை. சாலையில் நடந்து கண்காணித்துக் கொண்டே சிக்னலை இயக்கலாம். இதில் உள்ள சென்சார் மூலம் சிக்னல்களை 100 மீட்டர் தொலைவில் இருந்தும் இயக்க முடியும். ரிமோட்டில் 1 முதல் 8 வரையிலான வரிசை எண்கள் உள்ளன. இதில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வழித்தடம் பதிவு செய்யப்பட்டிருக்கும். எந்த எண்ணை காவலர் இயக்குகிறார் அந்த எண்ணிற்கான பச்சை விளக்கு எரியும்.