ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்பட்ட பிறகு அது ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தொகுதிகளை மறுவரையறை செய்ய கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை, 90 தொகுதிகள் அடங்கியதாக இருக்கும். இதில் ஜம்மு பகுதியில் 43 தொகுதிகளும், காஷ்மீர் பகுதியில் 47 தொகுதிகளும் இடம் பெறு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த தொகுதி மறுவரையறை ஜம்மு காஷ்மீரில் அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. வருங்காலத்தில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சட்டசபை தேர்தல், மறுவரையறை செய்யப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் தான் நடக்கும்.