அமெரிக்கா, இங்கிலாந்து, பாரதம் உள்ளிட்ட 12 நாடுகள் துப்பாக்கி முனையில் அமையும் ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிப்பதில்லை என ஏற்கனவே முடிவு செய்துள்ளன . அந்த வரிசையில் தற்போது கனடாவும் இணைந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 20 ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்கள் அந்த நாட்டை கைப்பற்றியபோது கனடா அதனை அங்கீகரிக்கவில்லை. அதேபோல தற்போதையை அரசையும் அங்கீகரிக்கும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார். ஆனால், தங்கள் சுயநலத்தை முன்னிட்டு ஜனநாயகத்தை மீறி, அப்பாவிகளைக் கொன்று ஆட்சி அமைத்துள்ள தலிபான்களின் அரசாங்கத்தை பாகிஸ்தான், ரஷ்யா, துருக்கி, சீனா போன்ற வேறு சில நாடுகள் அங்கீகரித்துள்ளன என்பது வருத்தத்திற்கு உரியது.