வரும் தேர்தலில் மக்கள், தி.மு.க கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்ற 20 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம் பா.ஜ.கவால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தி.மு.க மக்களுக்கு செய்த துரோகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ‘தமிழ் கல்வியில் துரோகம், ஜல்லிக்கட்டு விஷயத்தில் துரோகம், ஈழ தமிழ் சொந்தங்களுக்கு செய்த துரோகங்கள், தமிழ் மீனவர்களுக்கு செய்த துரோகங்கள், காவிரி நதி நீர் பிரச்சனையில் துரோகம், தமிழ் சமுதாயத்திற்கும் சமூக நீதிக்கும் செய்த துரோகங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான துரோகங்கள், மத விரோத செயல்கள் / பெரும்பான்மை சமுதாயத்திற்கு எதிரான செயல்கள், தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிகார அத்துமீறல், வாரிசு அரசியல்’ என 11 தலைப்புகளில் 100 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும், ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ எனும் அளவில் ஒரு சாம்பிளாகத்தான் தெரிகிறது. மொத்தமும் சொல்வதென்றால் 2,000 பக்கங்கள்கூட பத்தாது என இதனை படித்துப் பார்த்த ஒரு அன்பர் கருத்து தெரிவித்தார்.