கொரோனா தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் வேகமெடுக்கும் சூழலில், அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் காலைவரை ஊரடங்கை அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மேலும் இந்த நடவடிக்கைகளை கடுமையாக்க உள்ளது. வழிபாட்டுத்தலங்களை முன்பை போலவே சில நாட்கள் மூடவும் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், ‘கொரோனா காலத்தில் பிராத்தனை செய்வது ஒன்றே அதனை ஒழிக்கும் எனவே மசூதிகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ராசா அகாடமியின் செயலாளர் முகமது சயீத் நூரி அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஈத்-இ-மிலாட் ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்காவிட்டால் மகாராஷ்டிரா அரசு மீது வழக்குத் தொடர்வோம் என கடந்த அக்டோபர் 2020ல் மிரட்டியது, கொரோனா பொதுமுடக்க காலத்தில், அரசு விதிமுறைகளை மீறி ஒரு இறுதி சடங்கில், சயீத் நூரி உட்பட 125 பேர் கலந்து கொண்டது என ராசா அகாடமி தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.