‘பாரதத்தின் விமானப்படைக்கு தேவையான பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் இரண்டு அரசுகளுக்கு இடையிலானது. இந்த ஒப்பந்தம் மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தம் அனைத்தும் விதிமுறைகளை பூர்த்தி செய்கின்றன. அரசு மற்றும் தொழில் கூட்டாளிகளிடையே முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகின்றன. பாரதத்திற்கு 36 ரபேல் போர் விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் காசோலைகள் மூலமாகவே நடந்தது, அதில் எந்த விதிமீறலும் பதிவாகவில்லை. 2000 ஆண்டின் முற்பகுதியில் இருந்து, டசால்ட் ஏவியேஷன் ஊழல்களைத் தடுக்க கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. தொழில், வணிக உறவுகளில் நேர்மை, நற்பெயர் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல், செல்வாக்குகளை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என பிரான்ஸின் ரபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.