அயோத்தியில் பகவான் ஸ்ரீராமர் பெயரில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்கள், புராணங்கள், பாரதக் கலாச்சாரம், நம்பிக்கைகள், வேதங்கள் குறித்த கல்வியுடன் ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும். மாநில அரசாங்கத்துடன் இணைந்து தனியார் துறையினரால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது. பல்கலைக் கழகத்திற்கான இந்த முன்மொழிவைப் பாராட்டிய அயோத்தி ஸ்ரீராமர் கோயிலின் தலைமை பூஜாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், ‘இளைய தலைமுறையினரும் உலகமும் ஹிந்து தர்மம் கலாச்சாரம் பற்றி அறிந்துகொள்ள இந்த பல்கலைக்கழகம் விளங்கும்’ என்று கூறினார்.