ராமலிங்கம் கொலை வழக்கு

கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க பிரமுகரான ராமலிங்கம், அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். திருபுவனம் சுற்றுப்பகுதியில் நடந்த, மதமாற்ற நிகழ்வுகளை தட்டிக்கேட்டார். அந்த வீடியோ சமூக வலைதளம்களில் பரவியது. இதனையடுத்து, கடந்த 2019 பிப்ரவரி 5ம் தேதி ராமலிங்கத்தை முஸ்லிம் பயங்கரவாதிகள் கொடூரமாக கொலை செய்தனர். காவல்துறை விசாரணையில், இக்கொலையில் திருவிடைமருதூர், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 18 முஸ்லிம் பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களில், 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2019ல் இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. ரெஹ்மான் முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது மற்றும் நபீல் ஹாசன் ஆகிய 6 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது என்.ஐ.ஏ. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெஹ்மான் சாதிக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். மீதம் உள்ள 5 பேர் பதுங்கி இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.