இணைவோம் அணிலாக

 

ராமர் கோவில் கட்டுவதற்கு தனது உண்டியல் சிறு சேமிப்பு பணத்தை ₹100 இம்மானுவேல் (வயது 10) என்ற சிறுவன்  திருமதி கிளாரின்  அவர்களிடம் கொடுத்தார்.
‘ஸ்ரீராமஜென்ம பூமி நிதி சேகரிப்புக்கு அழைத்தபோது, ‘இதை விட பெருமை எங்களுக்கு வேறு என்ன இருக்கமுடியும்,ஸ்ரீராமஜென்ம பூமியில் மிக பிரம்மாண்ட ஆலய கும்பாபிஷேக விழாவிற்கும் நாங்களே வந்திருந்து மங்கள இசை சேவை செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும்’ என கூறி கலந்துகொண்டதுடன் நிதியும் அளித்தனர் ஸ்ரீரங்கத்தில்  நம்மை தங்களது நாதஸ்வர இசையால் கட்டிப்போடும் இஸ்லாமிய தம்பதிகளான கலைமாமணி, பத்மஸ்ரீ ஷேக் மெஹபூப் சுபாஹனி, காளிஷாபீப் மெஹபூப் சுபாஹனி தம்பதிகளும் அவர்களது புதல்வர் பெரோஸ் பாபுவும்.
செங்கல்பட்டு,  திருக்கழுகுன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணிக்காக, பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர்  கேசவ விநாயகம் நிதி சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
வேலூர் மாவட்டம், மகாதேவன் மலையை சேர்ந்த மகானந்த சுவாமிகள், முன்னாள் மேயர் – கார்த்தியாயனி – ஆகியோர் ஸ்ரீராம ஜென்ம ஆலய நிர்மாணத்திற்காக நிதியளித்தனர்.
ராணிப்பேட்டை , சோளிங்கரை சேர்ந்த நரிக்குறவர்கள் சமுதாய  துறவியான  கேந்து அம்மா சுவாமிகள்   ஸ்ரீராமஜென்மபூமி ஆலய நிதி சமர்பணத்திற்கு நிதியளித்ததுடன், தனது சமுதாய மக்களிடமும் நிதி பெற்றுத் தருவதாக கூறினார்.
சென்னை, புரசைவாக்கத்தில்  ராமர் கோயில் கட்டும் பணிக்காக செய்யப்பட்ட அழகிய ரதம்.
கிருஷ்ணகிரியில் ராமர் கோயில் நிதி திரட்ட கட்டமைக்கப்பட்ட பிரம்மாண்ட ரதம்.