தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்கு ராமர் சிலையை கடத்த முயன்ற முயற்சியை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் முறியடித்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆலந்தூரில் உள்ள நிறுவனத்தில் ஐ.ஜி.தினகரன் மற்றும் அவரது குழுவினர் சோதனை நடத்தியதில் இரண்டடி உயரம் மற்றும் பீடத்துடன் ஒரு அடி அகலம் கொண்ட கல் சிலையை கைப்பற்றினர். இது திருடப்பட்ட பழங்காலப் பொருளாக இருக்கலாம், இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிக்கிறது. கப்பல் நிறுவனத்திடம் சரியான ஆவணங்கள் இல்லாததால், சிலை கைப்பற்றப்பட்டு, அதனை அனுப்பியவரையும், சென்று சேருமிடத்தையும் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.