ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாக கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல ஹிந்து அமைப்புகள் இதற்காக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.