வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான ரயில் நிலையமான அசாமின் கௌஹாத்தி ரயில் நிலையத்திற்கு ஏ.சி மின்சார வழித்தடத்தை அறிமுகப்படுத்த ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (சி.ஆர்.எஸ்) அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், வடகிழக்கு மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான கௌஹாத்தி, இப்போது தேசத்தின் மற்ற அனைத்து பெருநகரங்களுடனும் மின்மயமாக்கல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு எல்லை ரயில்வே ஏற்கனவே கடந்த மாதம் 22 அக்டோபர் முதல் ஏசி மின்சார ரயில் இஞ்சினுடன் கூடிய பிரம்மபுத்ரா மெயிலின் வருகை மற்றும் புறப்பாட்டுடன் காமாக்யா நிலையத்திலிருந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இந்த மின்மயமாக்கல் பணியால், இதற்காக செலவிடப்படும் டீசல் பயன்பாட்டை குறைக்கும். நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை சேமிக்கும், பசுமை போக்குவரத்து சாத்தியமாகும்.