ரயில் பயணம் தடுப்பூசி அவசியம்

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமூக வலைத்தளம் வழியாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ‘மும்பையில் 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். முதல் கட்டமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம். இதற்காக ஆன்லைனில் டிக்கெட் பெற அலைபேசி செயலி உள்ளது. தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், மாத சீசன் பாஸ் பெறலாம். சீசன் பாஸ்களின் உண்மை தன்மையை கண்டறிய கியூ.ஆர் கோடு வழங்கப்படும்’ என தெரிவித்தார்.