அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், மத்திய அரசில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்,’ ‘மோடியின் மிகப் பெரிய வாய் ஜாலம்” என கூறியுள்ளார். இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகுர், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை ஊழல் தொடர்பாக ராகுல் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். முதலில், அமலாக்கத் துறை அதிகாரிகளின் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லட்டும். 10 லட்சம் காலியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி பிறப்பித்த உத்தரவை பாராட்டத் தெரியாத ராகுல், அதை விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அனைவரும் இதனை வரவேற்கின்றனர். ஆனால், இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் ராகுல் மகிழ்ச்சியடையவில்லை என்பதையே இது காட்டுகிறது’ என கூறினார். இதனிடையே நேற்று மூன்றாவது நாளாக ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்றது.