லடாக் எல்லை, கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த பாரத சீன வீரர்களின் மோதலில், நமது 20 வீரர்கள் உயிர் தியாகத்தையடுத்து, சீன முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ‘9 மாதங்களுக்கு பிறகு இந்த முடக்கம் நீக்கப்பட்டு, இரண்டு பில்லியன் டாலர் மதிப்பில், 150 சீன முதலீட்டு திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியதாக’ காங்கிரஸ் தலைவர் ராகுல் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். சுரோஜித் குப்தா, சித்தார்த்தா என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரையை, இதற்கு ஆதாரமாக ராகுல் பகிர்ந்து கொண்டுள்ளார். சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையும், ‘பாரதத்தின் முன்னேற்றம் தடைபட்டுள்ளதால், வேறு வழியில்லாமல் அனுமதி அளித்துள்ளது’ என இது குறித்து கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. ஆனால், உண்மையில், இத்திட்டங்களுக்கு பாரதம் அனுமதி வழங்கவில்லை. தற்போது வெளிநாட்டை சேர்ந்த மூன்று திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிப்பான் பெயிண்ட், சிட்டிசன் வாட்ச் ஆகிய இரண்டு ஜப்பான் நிறுவனங்கள், வெளிநாடுவாழ் இந்தியருடையது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.