ஹிந்துக்கள் மீது இனவெறி தாக்குதல்

கனடாவில் கடந்த செப்டம்பர் 11 அன்று, ஹிந்து குடும்பத்தினர் கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள ஸ்ட்ரீட்ஸ்வில் பூங்காவில் மாலை 5:30 மணியளவில் ஒரு சிறிய மத விழாவை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த ஹிந்து குடும்பத்தினர் தப்பித்து ஓடி காரில் சென்றபோதும் விடாது துரத்தி காரின் மீது கற்களை எறிந்து காரை சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர். கனடாவில் இந்துக்கள் வெறுப்பு குற்றங்களை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. பாரதத்தில் விவசாய போராட்டங்கள் ஆரம்பித்ததில் இருந்து, அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி வருகின்றன என்பது நினைவு கூரத்தக்கது. காவல்துறை இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.