ஆப்பிள் அலைபேசி நிறுவனம், சீனாவில் உள்ள தனது ஆப் ஸ்டோரிலிருந்து ‘குர்ஆன் மஜீத்’ என்ற பிரபல குர்ஆன் செயலியை அகற்றியுள்ளது. இந்த செயலி அதன் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களுக்கு குர்ஆனைப் படிக்க அல்லது கேட்க வசதியளித்தது. பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனம் இந்த செயலியை தயாரித்துள்ளது. இந்த செயலி சட்டவிரோத உள்ளடக்கங்களை கொண்டுள்ளதாக சீன அரசு புகார் அளித்து அந்த செயலியை நீக்குமாறு கேட்டுக்கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் எனினும், சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் துல்லியமாக என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகம் இதற்கு உரிய விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கிடையில், சீன அரசின் கட்டுப்பாடுகளையடுத்து அமேசானின் ஆடியோபுக் சேவையான ஆடிபிள், கிறிஸ்தவர்களின் பைபிளைப் படிப்பதற்கான சில பயன்பாடுகளையும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அந்த நிறுவனம் இடைநிறுத்தம் செய்துள்ளது.