துரைமுருகனுக்கு கேள்வி

கேரள அமைச்சர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அனுமதியின்றி நீர் திறந்து விட்டார். இந்த சம்பவம் தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு விவசாயிகளும் பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். வேறு வழியின்றி தி.மு.க அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் நான் 80 வயதிலும் அணையை வந்து பார்வையிட்டுள்ளேன், அ.தி.மு.க ஆட்சியில் அணையை கண்டுக்கொள்ளவில்லை என்றார். துரைமுருகன் பேச்சுக்கு பதிலளித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘கேரள அரசை கண்டிக்ககூட தி.மு.க அரசுக்கு துப்பில்லை, வக்கில்லை, சொரணை இல்லை, ரோஷம் இல்லை, நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோதுகூட முல்லைப் பெரியாறு அணை திறக்கப்படவில்லை. விதிப்படிதான் அணை திறக்கப்பட்டது என்றால், அதை ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை? மக்கள், திமுக அரசை இப்போது காறித் துப்புகிறார்கள். தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய தலைகுனிவு. எங்களை பற்றி தி.மு.க பேச எந்த ஒரு அருகதை இல்லை’ என்று கூறினார்.