தரமான சம்பவம்

மன்னார்குடி நகர தி.மு.க இளைஞரணி செயலர் சுதாகர், தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், தி.மு.க மாணவரணி நகர துணைச் செயலர் முருகேசன் உள்ளிட்ட எட்டு பேர், தஞ்சாவூர் அடுத்த சூரக்கோட்டையில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு ஒரு பேக்கரியில் டீ குடித்தனர். அருகில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டு தகராறு செய்ததுடன் கடையில் இருந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளனர். இதை தட்டிக் கேட்ட கடையில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பேக்கரியையும் அடித்தும் நொறுக்கினர் தி.மு.கவினர். இதனை அறிந்து அங்கு வந்த கிராம மக்கள், தி.மு.க.,வினரை மடக்கிப் பிடித்தனர். அதில் இருவர் தப்பிவிட, மாட்டிய சுதாகர், பாண்டவர், முருகேசன் உட்பட ஆறு பேரை நன்றாக அடித்துத் துவைத்தனர். படுகாயம் அடைந்த தி.மு.கவினரை காவலர்கள் வந்து மீட்டுச் சென்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், தி.மு.க பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.