பூஜ்ய ஸ்ரீ ஓம்காரானந்தா ஸ்வாமிகள் பரிபூரணம் அடைந்தார்

சாதாரண மனிதனுக்கும் ஆன்மீகத்தைக் கொண்டுச் சேர்க்க அரும்பணியாற்றிய பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி ஓம்காரானந்தா அவர்கள் பரிபூரணம் அடைந்தார். தமிழ்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்த புலமையும் சைவ சித்தாந்தம், வேதம், வேதாந்தம் என்று ஆன்மீக விஷயங்களில் தெளிந்த ஞானமும், கடினமான விஷயங்களை எளிதாக புரிய வைக்கும் திறமையும், ஹிந்து சமுதாயத்திற்கும் நம் தேசத்திற்கும் எதிரான செயல்களைத் தட்டிக்கேட்கும் துணிவும் கொண்ட ஸ்வாமி ஜியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

திருக்குறளையும், பாரதியின் சிந்தனையையும் ஸ்வாமி ஜியைப் போல் அறிந்திருந்தவர்கள் இல்லை என்றே சொல்லலாம். பகவத்கீதையை குறளுடன் ஒப்பிட்டு எளிமையாக புரிய வைத்த பெருமை ஸ்வாமி ஜியைச் சாரும். ஹிந்து சமயத்தை நிந்திக்கும் ஈனர்களுக்கு கண்ணியத்துடன் கண்டிப்பான எதிர்வினையாற்றி ஹிந்து சமுதாயத்தின் பாதுகாவலராக இருந்தவர் ஸ்வாமி ஜி. ஸ்வாமி ஜியின் மறைவு ஆன்மீகத்திற்கும், பண்பாட்டிற்கும், ஹிந்து சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தர்ம ரக்ஷ்ண சமிதி அமைப்பின் மாநிலத் தலைவராக இருந்து வழிகாட்டி வந்த அவர் சங்க இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்து வந்தார்.

ஆன்மிக மற்றும் தொண்டுள்ளம் கொண்ட சமுதாயத்திற்கு ஸ்வாமிகளின் இழப்பு எளிதில் ஈடு செய்ய முடியாதது. மகான்கள் மறைவதில்லை. தர்மம் காக்கும், தேசம் காக்கும் நற்பணிகள் வெற்றி பெற ஸ்வாமி ஜி ஆசி வழங்கி வழி நடத்த என்றும் நம்முடன் இருப்பாராக!!!

ஓம் ஷாந்தி! ஷாந்தி ! ஷாந்தி !

 

  • நம்பி நாராயணன்