புதுச்சேரி நிதிநிலை அறிக்கை

புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, இந்த நிதியாண்டுக்கான ரூ.10,696.61 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் முக்கிய அம்சமாக, புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். உயர்நிலை பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி மீண்டும் துவங்கப்படும். காரைக்கால் இலங்கை துறைமுகத்திற்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து இந்தாண்டு முதல் துவங்கப்படும். காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். சென்னை புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை இந்தாண்டில் துவங்க தனியார் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கு 25 மின்சார பேருந்துகளும் 50 மின்சார ஆட்டோக்களும் வாங்கப்படும். புதுச்சேரியில் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். (இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டவுள்ளார்). என சில முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.