பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையின் நிதியுதவியுடன் பல சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் தொடர்புகளை கொண்ட மிகப்பெரிய மதமாற்ற மோசடி தொடர்பாக மதமாற்ற சிண்டிகேட்டின் தலைவர் உமர் கெளதமின் மகன் அப்துல்லாவை உத்தரப் பிரதேசத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளது. கடந்த ஜூன் 20ம் தேதி உமர் கௌதம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் இரு நாட்களுக்கு முன் கௌதம் புத்தா நகரில் கைது செய்யப்பட்டார். அவர்கள் ஊனமுற்றோர், ஆதரவற்றோர் என ஆயிரக்கணக்கான பேரை ஆசைகாட்டி ஏமாற்றி மதம் மாற்றியுள்ளனர். விசாரணையில், தனது தந்தையைப் போலவே அப்துல்லாவும் தனது வங்கிக் கணக்கில் ரூ. 75 லட்சம் நிதியை முறைகேடாகப் பெற்றுள்ளார், அதில் ரூ.17 லட்சம் வெளிநாடுகள் மூலம் பெறப்பட்டது. அல் ஃபரூக்கி மதரஸா மற்றும் இஸ்லாமிய தாவா மையம் ஆகியவை மூலமே பெரும்பாலான மதமாற்றங்கள் செய்யப்பட்டன. அப்துல்லாவின் கூட்டாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 57 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நிதி பெறப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தெரியவந்துள்ளது.