ராகுல் காந்தி தனது நேபாள நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளம் சென்றார். நேபாளத்தில் இரவு நேர விடுதியில் ஒரு பெண்ணுடன் ராகுல் காந்தி கேளிக்கை நிகழ்ச்சிகளில் ராகுல் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகி காங்கிரசாரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. காங்கிரஸ் கட்சி இக்கட்டான காலகட்டத்தில் இருக்கும் போதெல்லாம் கட்சியை அம்போவென விட்டுவிட்டு அவர் இவ்வாறு ரகசியப் பயணங்கள் மேற்கொள்வது இது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் ராகுலின் இந்த ரகசியப் பயணத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் அவர் அவரது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், ‘அது11 ஆண்டுகளுக்கு முன் 2011ல் பூட்டான் அரச திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம், இது அப்போதே பல ஊடக நிறுவனங்களால் பகிரப்பட்டது, அந்த புகைப்படத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவும் உள்ளார், சிந்தியா மார்ச் 2020ல் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். தற்போது சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்’ என கூறி காங்கிரசின் பொய்யை நெட்டிசன்கள் உடைத்தெறிந்தனர். இதற்கிடையே புகைப்படத்தில் ராகுலுடன் காணப்பட்ட பெண், நேபாள பாடகி சரஸ்வதி காத்ரி என்றும் சரஸ்வதி அந்த புகைப்படங்களை அவரே சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.