தேசியக்கொடி ஏற்ற தடை

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றையும் முருகர் கோவில் பஜார் வீதி அருகில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு யாரோ ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என கூறி, கொடியேற்றத் தடை விதித்தார் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் இளவரசன். கொடியேற்ற சென்ற இந்து முன்னணியினருக்கு மிரட்டலும் விடுத்து அவர்களை கைது செய்தார். கொடிக் கம்பம் அகற்றப்பட்டது. நாம் சுதந்திரம் அடைந்த பாரதத்தில்தான் இருக்கிறோமா அல்லது முகலாய, ஆங்கிலேய ஆட்சி நடக்கிறதா என்று புரியவில்லை, இது குறித்து எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், காவல் ஆய்வாளர் உட்பட 75வது சுதந்திர தினத்தை கொண்டாட தடை ஏற்படுத்தியவர்கள் அனைவர் மீதும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.