கோயிலில் வழிபட தடை

ராஜபாளையம், சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வழிபாடு செய்வதற்காக காளியம்மன் கோயில், முனியாண்டி கோயில் உள்ளது. அந்த ஊரில் கம்யூனிஸ்ட்‌ கட்சியை சேர்ந்த வர்கீஸ் என்பவர், ‌தான் மட்டுமே அக்கோயிலின் நிர்வாகி, தனக்கு விருப்பப்பட்ட நேரத்தில்தான் கோயில் திறக்கப்படும் என கூறியுள்ளார். ஊர் நிர்வாகம் சார்பாக பல முறை‌ சேத்தூர் காவல்நிலையத்தில் முறையிட்டும், ராஜபாளையம் வட்டாட்சியரிடம் முறையிட்டும்‌ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக காவல்நிலைய அதிகாரிகள், வட்டாட்சியர், வருவாய் நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் வர்கீசுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். சமீபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வழிபாடு செய்ய அனுமதி கேட்டபோது, வர்கீசும் அதிகாரிகளும் பட்டியலின மக்களிடம் அவமரியாதையாக நடந்துகொண்டனர். 13 வயது சிறுவன் ஒருவனை கடுமையாக தாக்கினர். இதனை கண்டித்து ஊர் மக்கள் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் சாலை மறியல் செய்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் இதில் கலந்துகொண்டனர். வர்கீஸ் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போராடிய பொதுமக்களை காவல்துறை கைது செய்துள்ளது.