கோயில் நகைகளை உருக்கத் தடை

ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், முறையாக அறங்காவலர்கள் நியமிக்கப்படாத வரை, கோயில் நகைகளை உருக்க தடை விதிப்பதாக  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகஅரசின் கோயில் நகைகளை உருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வத்தாமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஹிந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்தில் கோயில் நகைகளை உருக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஹிந்து அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியும். மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது. வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்குவதற்கு பதிலாக, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கலாம். கோயில் நகைகள் தொடர்பாக முறையான பதிவேடுகள் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்குவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது, ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்துகிறது. எனவே, நகைகளை உருக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இம்மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாதவரை, கோயில் நகைகளை உருக்கக்கூடாது. கோயில் நகைகளைக் கணக்கெடுக்கலாம். இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.