கர்நாடக சட்ட பேரவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அம்மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா, ‘கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. பழங்குடி மக்கள் அதிக அளவில் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். அரசு, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கும், சுந்ததிரமாக செயல்பட அனுமதிக்கும். அதேசமயம், பொது இடங்களில் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பது தடை செய்யப்படும்’ என தெரிவித்தார்.