பிரியாரிட்டி செக்டார் லெண்டிங்

பாரதத்தில் மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கச் சில நாட்களுக்கு முன்பு நிதி அயோக் அமைப்பு ‘பிரியாரிட்டி செக்டார் லெண்டிங்’ பிரிவின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடனை அளிக்கும் திட்டத்தை முன்வைத்தது. இத்திட்டத்தைத் தற்போது ரிசர்வ் வங்கியும் ஆதரித்துள்ளதுடன் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. ‘பிரியாரிட்டி செக்டார் லெண்டிங்’ என்பது, ஒரு துறை வேகமாக வளர்ச்சி அடைவதற்காகவும் அத்துறை வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் குறைந்த வட்டியில் கடன் அளிக்கும் திட்டமாகும். இதன்படி, இத்திட்டம் இறுதி ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சார வாகனங்களுக்கான கடன், மிகக் குறைந்த வட்டியில் மக்களுக்கு கிடைக்கும். மின்சார வாகனங்கள் உற்பத்தி அதிகரிக்க இத்திட்டம் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.