இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி

‘புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நூலுக்கு, இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளார். அதில், மோடியின் திட்டங்கள் சிலவற்றை கோடிட்டுக்காட்டிய இளையராஜா, அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு பாராட்டியிருந்தார். இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி தெரிவித்தார்.