உண்மையை உரைக்கும் பாதிரி

தி டைம்ஸ்.கோ.யுகே என்ற இணையதளம் கடந்த பிப்ரவரி 20, 2022 அன்று  வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக இத்தாலிய பாதிரிகளால் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். ஆனால் இதுகுறித்து யாரும் செய்திகளை வெளியிடவில்லை. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் சமீபத்தில் இதுகுறித்து நடைபெற்ற விசாரணைகளை போலவே இத்தாலியிலும் இதேபோன்ற நடவடிக்கை தேவை என்று பாதிரி ஹான்ஸ் சோல்னர் கூறியுள்ளார். அதற்கு உதாரணமாக, ‘ஜான் ஜோசப் ஜியோகன் என்ற பாதிரி, 34 ஆண்டுகளில் 130 குழந்தைகளிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். அப்போதைய பாஸ்டனின் பேராயர் பெர்னார்ட் பிரான்சிஸ் லா,  அவரை தண்டிக்காமல், குற்றங்களை மறைத்து, ஜியோகானையும் மற்ற குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த பாதிரிகளையும் வேறு சர்ச்சுகளுக்கு இடம் மாற்றினார். அதனால் அவர்கள் தப்பித்தனர். அங்கு சென்று மேலும் பல குழந்தைகளை  நாசப்படுத்தினர். ஆஸ்திரேலியாவில் 2012ல் விக்டோரியா மாகாணத்தில் நடந்த தற்கொலைகளில் குறைந்தது 40 தற்கொலைகள் கத்தோலிக்க மதகுருமார்களுடன் நேரடித் தொடர்புடையவை என்று காவல்துறை அறிக்கை கூறுகிறது’ என தெரிவித்துள்ளார். மேலும், இதை போன்ற பல குற்றச்சாட்டுகளையும், அதில் இருந்து பாதிரிகள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி எப்படி தப்பிக்கின்றனர். அவற்றை எப்படி மூடி மறைக்கின்றனர் போன்றவற்றை தெரிவித்துள்ள அவர், உலக அளவில் இந்த விஷயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.