உத்தர பிரதேசத்தில், மிகப் பெரிய அளவில் வெளிநாட்டு நிதியுதவியுடன் ஏழைகள், ஊனமுற்றோர்களை ஏமாற்றியும் மிரட்டியும் மதமாற்றங்களில் ஈடுபட்ட முஸ்லிம் மதகுரு மௌலானா கலீம் சித்திக் என்பவரை அம்மாநில பயங்கரவாத தடுப்புப் படை காவல்துறை கைது செய்தது. முன்னதாக இது தொடர்பாக கடந்த ஜூனில், முப்தி குவாஸி, ஜஹாங்கிர் ஆலம், குவாஸ்மி, முகமது உமர் கௌதம் ஆகியோரை பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, பிரிட்டனை சேர்ந்த அல் பல்லா அறக்கட்டளையில் இருந்து 57 கோடி ரூபாய் என பல வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி பெற்றது தெரியவந்தது. இதுவரை இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் கல்வி, சமூக, ஆன்மிக அமைப்புகளின் பேரில் மிகப் பெரிய மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.