முன்கூட்டியே திட்டமிட்ட வன்முறை

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஷோபா யாத்திரை நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக முஸ்ளிம்களும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களும் கற்களை வீசி கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். பல கடைகள், தனியார் வாகனங்கள் காவல்துறை வாகனங்கள் எல்லாம்  சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வழக்கில் 36 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு அமைதி திரும்பிய நிலையில், ஷிப்பூர் பகுதியில் புதிதாக வன்முறை நிகழ்த்தப்பட்டது. இதேபோல் ஹூக்ளி மாவட்டத்திலும் கலவரங்கள் அரங்கேற்றப்பட்டன. இதையடுத்து இதனை விசாரிக்க 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. மாநில அரசும் காவல்துறையும் போதிய ஒத்துழைப்பு வழங்காததால், அந்தக் குழு கலவரங்கள் நடைபெற்ற பகுதிகளில் தங்களால் முடிந்தவரை ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில், “ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின் போது நடந்த வன்முறை, கலவரச் சம்பவங்கள் அனைத்தும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டவை. அனைத்துச் சம்பவங்களும் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டும் வகையில் அங்கு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் துவங்குவதற்கு சற்று முன்பு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “முஸ்லிம்கள் பகுதிகள் வழியாக எந்த ஊர்வலம் சென்றாலும், அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசியுள்ளார். இதன் மூலம் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார் என தெரிய வந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த கலவர வழக்குகளை தேசிய விசாரணை அமைப்பிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, விசாரணை நியாயமான முறையிலும், பாரபட்சமற்ற முறையிலும் நடைபெறும். கலவரம் நடந்த இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.