பாரதத்தின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்.ஆர்.டி.எஸ்) பாதையை செயல்படுத்துவதில், தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (என்.சி.ஆர்.டி.சி), பிரி காஸ்ட் எனப்படும் முன் வார்ப்பு கட்டுமான தொழில்நுட்பத்தை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. 82 கிமீ நீளம் உள்ள இந்த ஆர்.ஆர்.டி.எஸ் நிலையங்கள் மற்றும் வையா டக்ட்களை உருவாக்குவதற்கு பயன்படும் இந்த தொழில்நுட்பம், கட்டுமானத்தின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பெருமளவு குறைக்கும், டெல்லி, காசியாபாத், மீரட் வழித்தடத்தை சரியான நேரத்தில் முடிக்க உதவும். இதில், 70 முதல் 80 சதவிகிதம் வரையிலான கட்டமைப்புகள் முன் வார்ப்பு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டு கிரேன்கள் மூலம் தேவையான இடத்தில் பொருத்தப்படுகின்றன.