கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா அங்காதர்கா பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் சிலர், வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து தொழுகை செய்தனர், இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களும் பிற மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வட்டார கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற கல்வித்துறை அதிகாரிகள், வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் விசாரித்தனர். அப்போது கடந்த 4ம் தேதி விளையாட்டு நேரத்தில் முஸ்லிம் மாணவிகள் தொழுகை நடத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பள்ளி நேரத்தில் தொழுகை செய்திருப்பது, அரசின் உத்தரவை மீறுவதாக உள்ளது எனக்கூறி, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இதேபோன்று பாகல்கோட்டை மாவட்டம் இலகல் பகுதியில் உள்ள மௌலான ஆசாத் பள்ளியில் 6 முஸ்லிம் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பாகல்கோட்டை கல்வித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.