கிரண் கண்டோல்கர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவா தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் அவமானகரமான தோல்விக்கு அரசியல் வியூகவாதி என கூறப்படும் பிரசாந்த் கிஷோர் தான் காரணம். காங்கிரஸை அச்சுறுத்துவதற்காக கோவாவிற்கு வந்தார். இறுதியில் பா.ஜ.க அங்கு மீண்டும் ஆட்சி அமைக்க உதவினார். திருணமூல் காங்கிரசில் இணைந்து நாங்கள் பெரிய தவறை செய்துவிட்டோம்” என்று குற்றம் சாட்டினார். கோவா பார்வர்டு கட்சியின் செயல் தலைவராக இருந்த கிரண் கண்டோல்கர், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றத் தேர்தலுக்கு முன்னதாக, அக்கட்சியில் இருந்து விலகி திருணமூல் காங்கிரசில் சேர்ந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. கிரண் கண்டோல்கருடன், இணைந்து கண்டோல்கரின் மனைவி கவிதா கண்டோல்கர், அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான தாரக் அரோல்கர், சந்தீப் வசார்கர் ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.