சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில், பாரதம் உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருத்து, 343 அணிகளும், 2,௦௦௦த்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். இப்போட்டியில், சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி ஆகியோர், பாரத அணி சார்பில் பங்கேற்று விளையாட உள்ளனர். வைஷாலி நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் கல்லுாரியின் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.