வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்குப்பதிவு அன்று பணியில் இருப்பவராக சான்றளிக்கப்பட்டு, தனது சொந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழலில் உள்ள, ரயில் டிரைவர்கள் (லோகோ பைலட்), உதவி பைலட், மோட்டார் மென், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள், ஏ.சி. பெட்டி உதவியாளர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள், வாக்குப்பதிவு அன்று பாரத தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஊடகத்தினர், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்தில் உள்ள ஊழியர்களை அத்தியாவசிய சேவையின் கீழ் வரும் வாக்காளர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அவர்கள் அத்தியாவசிய சேவைப்பணியின் கீழ் வரக்கூடிய, தபால் ஓட்டளிப்பதற்கு தகுதியுள்ள நபராக கருதப்படுவார்கள். அவர்கள், தபால் மூலம் வாக்களிக்க விரும்பினால் தேர்தல் அதிகாரியிடம் 12-டி விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://election.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.