உண்மையை தோலுரித்த ‘பாலிடாக்ஸ்’

சிலநாட்களுக்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில், கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் தெருக்கூத்து கலைஞர் தங்கராசு ஆவார். மிகவும் ஏழ்மையான நிலையில் சாதாரண குடிசை வீட்டில் வசித்துவந்த இவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுகுறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களின் வெளியானாலும், கட்டிக்கொடுக்கப்பட்ட வீடு எந்த அரசினுடைய திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுக்கப்பட்டது என்பதை முறையாக யாரும் வெளியிடாததால், வருவோர் போவோர் எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதற்கு ஏதுவாக அது அமைந்தது.

எனவே உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சில் தீவிரமாக இறங்கிய Politalk’s முகநூல் பக்கத்தினர். பாளையங்கோட்டையில் நடிகர் தங்கராசை நேரில் சந்தித்து பேட்டியெடுத்தனர். மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் தான் அவருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் தெரிவித்தனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த நடிகர் தங்கராஜ் பிரதமர் நரேந்திரமோடிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.