நெல்லை மாநகரில் ஆளுநரை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் போஸ்டர் ஒட்டி பல நாட்களாகியும் கிழிக்கப்படாத நிலையில், ஆளுநருக்கு நன்றி தெரிவித்து இந்து முன்னணி சார்பில் ஒட்டிய போஸ்டர்களை அனைத்து இடங்களிலும் கிழித்தெறிந்தது நெல்லை மாநகர காவல்துறை. இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா. குற்றாலநாதன் இல்லத்தின் அருகே போஸ்டரை கிழிக்க முற்பட்டபோது, காவலரிடம் குற்றாலநாதன் நியாயம் கேட்டர். அந்த போஸ்டரில் தமிழக அரசை கண்டித்தோ, ஆளுநரை கண்டித்தோ, தவறான வார்த்தைகளை பயன்படுத்தியோ எதுவும் இல்லை எனும்போது, அந்த போஸ்டரை ஏன் கிழிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பிரச்சனை ஏதும் வரக்கூடாது என்றுதான்… என மழுப்பிய காவல் அதிகாரி, இது மேலிடத்து உத்தரவு என்று ஒப்புக்கொண்டார். இதனால், அந்த போஸ்டரை மட்டும் கிழிக்காமல் திரும்பிச் சென்றனர் காவல்துறையினர். இந்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது. காவலர்களும் உதவி ஆய்வாளர்களும் ஆய்வாளர்களும் பாவம், தங்கள் மேலதிகாரிகள் சொல்வதை கேட்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். ஆளுநருக்கு எதிரான போஸ்டர்களை அனுமதித்தும், ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டரை கிழிக்த்து வருகிறது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை. தி.மு.க மற்றும் ஆளுநருக்கு இடையே நடைபெற்று வரும் மோதல்போக்கின் காரணமாக முதல்வர் தனது வசமுள்ள காவல்துறையை ஆளுநருக்கு எதிராக ஏவல்துறையாக ஆக்குகிறாரா? நீதிமன்றமே ஒப்புக்கொண்ட தீவிரவாத இயக்கங்களான பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ ஒட்டிய போஸ்டர்களை கிழிக்காமல் இந்துமுன்னணி போஸ்டரை மட்டும் தமிழக அரசு கிழிக்கும் மர்மம் என்ன? என்ற சந்தேகம் தனால் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.