மிஷனரிகள் குறித்து காவல்துறை உஷார்

சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் சர்மா, அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், கிறிஸ்தவ மிஷனரிகள், பழங்குடி மக்களை பல்வேறு விதங்களில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி வருகின்றனர். இதில் அவர்கள் அதிதீவிரமாக செயல்படுகின்றனர். அப்படி மாறிய பழங்குடி கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவத்திற்கு மாறாத பழங்குடியினருக்கும் இடையே சமீப காலமாக மோதல்கள் அதிகரித்துள்ளன. இது பழங்குடி பிராந்தியங்களில் வன்முறைக்கு வழிவகுக்கும். எனவே, இதனை காவல்துறையினர், உளவுத்துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் வழக்கம்போல எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.