பி.எம்.எஸ் பங்கேற்காது

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘இந்த பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு அரசியல் கட்சிகளின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்காக செய்யப்படுவது. அரசியல் உந்துதல் கொண்டது. இந்த தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்ததற்கும் தொழிலாளர்களின் நலன்களுடன் எந்த தொடர்பும் கிடையாது. விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களில் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என தெரிகிறது. மாறாக அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு அவர்கள் தொழிலாளர்களை பயன்படுத்துகிறார்கள். தொழிலாளர்களை அரசியல் கட்சிகளின் நலனுக்காக சுரண்ட வேண்டாம். தொழிலாளர்களின் நலனுக்காக கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அனைத்து தொழிற்சங்கங்களும் தங்கள் அரசியல் தொடர்புகளை கைவிட நாங்கள் கோருகிறோம். சில அரசியல் கட்சிகளின் அரசியல் நலன்களுக்கு சேவை செய்ய தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்’ என தெரிவித்துள்ளது.