பி.எம் கேர்ஸ்

கொரோனா தொற்றால், பெற்றோர் இருவரும் அல்லது சட்டப்பூர்வ காப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் இருவரும் இறந்துவிட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையிலான பி.எம்.கேர்ஸ் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மே 29ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டம் கடந்த ஜூலை 15 முதல் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பெற்றோரை, காப்பாளரை இழந்த குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளியில் இலவச படிப்பு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட முழுமையான அக்கறை யுடன் 23 வயதுவரை நீண்ட காலம் பாதுகாப்பை பெறவும், தற்சார்பு நிலையை அடையவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள் உதவிபெற https://pmcaresforchildren.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கு தகுதி உடைய குழந்தைகளை, பொதுமக்களும் மேற்கண்ட இணையதளத்தில் சிபாரிசு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.